மாற்று இடத்தில் குடியமர்த்துவது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது - ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

0 2502

ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவது கூட மறைமுகமாக ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாற்று இடத்தில் குடியமர்த்தும் அரசின் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்ய குடியிருப்புவாசிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், அவ்வாறு அனுமதிப்பது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதைப் போன்றது என்றனர். ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கும், தண்ணீர் பஞ்சத்துக்கும் காரணமாவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments