2021ல் உலகளவில் 65 லட்சம் மின்சார கார்கள் விற்றுள்ளதாக தகவல்
2021ஆம் ஆண்டில் உலகளவில் 65 லட்சம் மின்சார கார்கள் விற்றுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 109 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சர்வதேச மின்சார வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அந்நிறுவன கார்களே சந்தையில் 14 சதவீதம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் விற்கப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 85% சீனா, ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டுள்ளது.
போக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் அதிகளவில் விற்பனையானாலும், கடந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லாவின் மாடல் 2 ரக கார்களே அதிகளவில் விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அங்கு மின் வாகனங்களை மக்கள் அதிகளவில் நாடுவதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், புதிய வாகனத்தை பெற 9 மாதங்கள் முதல் ஓராண்டு வரை காத்திருப்பதாகவும் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments