தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

0 2212
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள வள்ளி விலாஸ் மற்றும் சிவ வள்ளி விலாஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல், சிதம்பரத்தில் உள்ள வள்ளி விலாஸ், விருத்தாச்சலத்தில் உள்ள ஜெயின் ஜுவல்லரி , புதுச்சேரியில் உள்ள ராம் தங்க மாளிகை , விழுப்புரம், காரைக்காலில் உள்ள சிவ வள்ளி விலாஸ் நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments