ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.கவினரை விரட்டியடித்த போலீசார்

0 1289

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி விரட்டியடித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இரண்டாம் நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினர் ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை சுற்றி போலீசார் பேரிகார்டுகள் அமைத்து கண்காணித்தனர். சிலர் பேரிகார்டுகளை தாண்டிச் செல்ல முயன்றதால், அவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments