தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சந்தித்த பின் பேசிய அவர், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிகப்படும் கட்டணத்தையே வசூலிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த உத்தரவை அமல்படுத்துமாறு கட்டண நிர்ணயக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்ற அவர், இருந்தாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Comments