பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
பப்ஜி மதனின் பேச்சுக்கள் நச்சுத்தன்மை உடையாதாக இருப்பதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அவரை ஏன் வெளியில் விடவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த வழக்கில் கைதான பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை ரத்து செய்யக் கோரி மதன் தொடர்ந்த வழக்கு 22-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், மனுவை முன்கூட்டியே விசாரிக்குமாறு அவரது மனைவி கிருத்திகா மனுதாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்த போது, உடல் நிலையை காரணம் காட்டியே முன்கூட்டியே விசாரணை கோருவதாகவும், ஆனால் மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும், ஃபிசியோதரப்பி சிகிச்சை மட்டுமே அவருக்கு தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை முன்கூட்டியே விசாரிக்க மறுத்து கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Comments