திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், திருவண்ணாமலை சி.இ.ஓ சஸ்பெண்ட்

0 1554

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு, 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள்கள் சனிக்கிழமையே வாட்சப்பில் வெளியாகின.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில் இருந்து வினாத்தாள்கள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினாத்தாள்களை அனுப்பி, தேர்வுத்துறை ரகசியங்களைக் காக்கத் தவறியதாகக் கூறி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments