மாட்டுத்தீவன மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு

0 2766

5ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் முதலமைச்சராக அவர் பதவி வகித்த போது, கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகளை சிபிஐ பதிவு செய்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டில் முதல் வழக்கில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, மேலும் 3 தீவன வழக்குகளில் லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கால்நடைத்துறைக்கு அரசு கருவூலத்தில் இருந்து 139 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் லாலு உள்ளிட்ட 76 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments