51 பேரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு.!
திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் உறுப்பினர்கள் மேலும் 51 பேர் தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கான வார்டுகள் போக, மற்ற வார்டுகளுக்கு தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் 51 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments