கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர்
கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்தி புழக்கத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்ததாக அவர் தெரிவித்தார். எந்த ஒரு வாதமும் அடிப்படை பரிசோதனையிலும் தேர்ச்சி பெறவிவில்லை என்று குறிப்பிட்ட ரபிசங்கர், கிரிப்டோ கரன்சியை இந்தியாவின் நிதி நடைமுறையில் இருந்து விலக்கி வைப்பதே சரியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அரசின் நிதிக்கட்டுப்பாட்டை மீறும் விதமாக கிரிப்டோ கரன்சியின் தன்மை இருப்பதாகவும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் கூடிய மோசடித் திட்டங்களைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ரபிசங்கர் தெரிவித்துள்ளார்.
Comments