நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி - சகோதரர் பசியால் பலியான சோகம்.. பறிபோன வேலையால் பரிதாபம்.!

0 5662

பிரபல நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி தனது சகோதரருடன் விழுப்புரத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் , இருவரும் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வேலை இழப்பால் வறுமையின் பிடியில் சிக்கி பலியான பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழ் திரைஉலகின் பிரபல நடிகையான ஊர்வசியின் உடன் பிறந்த தம்பி கமல் இவரது மனைவி பிரமிளா, இந்த தம்பதியர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரமிளா தனது கணவர் கமலை பிரிந்து விழுப்புரத்தில் உள்ள தனது அண்ணன் சுசீந்திரன்வீட்டில் வசித்து வந்தார். சுசீந்திரனுக்கு 54 வயது ஆகும் நிலையில் அவருக்கு திருமணமாகவில்லை என்பதால் அந்த வீட்டில் அண்ணன் தங்கை இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, சுசீந்திரன் வேலையிழந்ததாக கூறப்படுகின்றது. இதனால் சேமிப்பு எல்லாம் செலவானதால் ஒரு கட்டத்தில் இருவரும் சாப்பாட்டிற்கே வழியின்றி வறுமையில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பூட்டிய நிலையில் காணப்பட்ட அவர்களது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று, கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு அண்ணன் தங்கையான சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இறந்து கிடந்தனர். இறந்து ஒரு வாரம் இருக்கும் என்பதால், இருவரது உடல்களும் சிதைந்த நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து, அந்த இரு சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகையில் உறவினர்கள் வறுமை காரணமாக, சாப்பட்டிற்கு வழியின்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments