மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம்
டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுக்கடைக்கு எதிரான கிராம சபையின் தீர்மானம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இரு வேறு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, மூன்று நீதிபதிகள் அமர்வில் ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிராம சபை தீர்மானம் பற்றிய விதிகளில் திருத்தம் செய்வது பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுக்கடை குறித்த ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்காமல் அதனை திறக்க அனுமதிக்க கூடாது என விதிகள் திருத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
Comments