மருத்துவப் படிப்பு மாணவர்கள் கல்லூரிகளில் சேரக் காலக்கெடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு

0 1741
மருத்துவப் படிப்பு மாணவர்கள் கல்லூரிகளில் சேரக் காலக்கெடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர்வதற்கான காலக்கெடு பிப்ரவரி 21ஆம் நாள் மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக வலிப்பு நோய் நாளையொட்டிச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்குப் பரிசுப் பொருட்களை ராதாகிருஷ்ணன் வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments