திமுக நிர்வாகியை கத்தியுடன் ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக நிர்வாகி கைது

0 2413
திமுக நிர்வாகியை கத்தியுடன் ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக நிர்வாகி

மதுரை, திருப்பரங்குன்றத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கையில் கத்தியுடன் திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக பிரமுகரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வரும் சரத்குமார் என்ற இளைஞருக்கும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் இருக்கும் அய்யனார் என்ற இளைஞருக்கும் இடையே சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனை நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சென்ற அதிமுக நிர்வாகியான அய்யனார், சரத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையிலும், அய்யனார் தொடர்ந்து கத்தியுடன் விரட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஓடிச்சென்று வீட்டை அடைத்துக் கொண்ட சரத்குமாரை, அய்யனார் கதவு இடைவெளிக்குள் கத்தியை விட்டு தாக்கிய நிலையில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments