ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன. இந்நிலையில் இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 56,406 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 532 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,843 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் தவிர உலோக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. இதனால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
Comments