தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி நடனம் ஆடி போராட்டம்

0 2648
தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி நடனம்

கிரீஸில் தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் நடனம் ஆடினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய கிரேக்க அரசு, ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத 5,000 பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து, பணியிடை நீக்கம் செய்தது.

நாடு முழுதும் இருந்து ஏதென்ஸ் நகருக்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் பாராளுமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிரீத்தி தீவில் இருந்து வந்தவர்கள் பாராளுமன்றம் முன் பாரம்பரிய நடனமாடி போராட்டகாரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments