எல்லையில் படைகளை குவித்திருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் அழைப்பு
உக்ரைன் எல்லையில் படைகளை குவித்திருப்பது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் வியன்னா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் விடுத்த கோரிக்கைகளுக்கு ரஷ்யா பதிலளிக்க தவறிவிட்டதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இதன் விளைவாக தாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தங்கள் நாட்டு எல்லையிலும், கிரீமியா பகுதியிலும் ரஷ்யா படைகளை வலுப்படுத்தி வருவது குறித்தும் அவற்றை திரும்பப்பெறுவது தொடர்பாகவும் விவாதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments