சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2-5 ஆண்டுகள் வரை சிறை
மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்து அது நிரூபிக்கப்பட்டால் , அந்த புகார் பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments