ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் பாய்ந்த ஒளியமயமான காட்சி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்பட்ட வீடியோ வைரல்

0 3694

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சமயத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதன் காட்சி சில நிமிடங்கள் தென்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலர் கண்டு ரசித்ததுடன், வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கூறிய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி எபினேசர், கொடைக்கானலிலிருந்து வான்வெளியில் ராக்கெட் செல்லும் காட்சியானது சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் தென்பட்டதாக தெரிவித்தார்.

image

image

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புவி கண்காணிப்புக்கான அதிநவீன ரேடார் செயற்கைக்கோள் உட்பட மூன்று செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி 52 ராக்கெட் அதிகாலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments