வாரத்தின் முதல் நாளிலேயே கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை..!
வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
காலை ஒன்பதரை மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,514 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 56,638 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 450 புள்ளிகள் குறைந்து 16,923 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பங்குகள் 5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தன.
ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
Comments