எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்..! மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

0 5133

தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவர்களை பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக்கான ஆணைகளை பெற்ற மாணவர்கள் வருகிற 16-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வகுப்புகளுக்கு வந்தனர்.

மாணவர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, வகுப்புகளை நடத்தவும், ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments