ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு; பதவியேற்பு விழாவில் ரஷ்யா - உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சு

0 2138

ஜெர்மனியின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் 2 வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய பிரான்க் ஸ்டீன்மையர், உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரம் குறித்து பேசினார். உக்ரைன் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற வேண்டும் என ரஷ்யாவை கேட்டுக் கொண்ட அவர், ஐரோப்பிய நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஜெர்மனி உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments