காங்கிரசை அழிக்க ராகுல்காந்தியும் பிரியங்காவும் போதும் - யோகி ஆதித்யநாத்

0 3095

உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக முந்நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், முதற்கட்டத் தேர்தலுக்குப் பின் உள்ள சூழல், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் தேர்தலின்போது கொலைகள், வன்முறை, வாக்குச்சாவடி கைப்பற்றல் ஆகியன நடந்ததாகக் குற்றஞ்சாட்டிய யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

சாதி மதம் குடும்பம் ஆகியவற்றைச் சுற்றி முன்பு அரசியல் இருந்ததாகவும், இப்போது வளர்ச்சி, நல்லாட்சி, ஏழைகள் நலன், ஊரகம் ஆகியனவும், பெண்கள், உழவர்கள், இளைஞர்கள் ஆகியோரும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். காங்கிரசை அழிக்க ராகுல்காந்தியும் பிரியங்காவும் போதும் என்றும், வேறு யாரும் தேவையில்லை என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments