புல்வாமா தாக்குதல் வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக உள்ளது - பிரதமர் மோடி

0 1726

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.

இதனை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் தைரியமும், தியாகமும் இந்தியாவை வளமானதாக மாற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதல் சம்பவம் நடந்த புல்வாமாவில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், உயிரிழந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments