சீனாவின் 54 செயலிகளுக்கு இந்தியாவில் தடை?

0 2662

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட சீனாவின் 54 செல்பேசிச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள் உள்ளதாகவும், பயனாளர்களின் தரவுகளைத் திருடும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறிக் கடந்த ஆண்டு ஜனவரியில் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட 54 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments