வானில் வட்டமிட்டபோது திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்..!
மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக தீடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மெக்சிகோவின் சிவாவ்வா (Chihuahua) நகரில் அல்வரோ ஆப்ரெகான் (Alvaro Obregon) என்ற இடத்தில் இறந்த பறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
வடக்கு கனடாவில் இருந்து குளிர்காலத்துக்காக மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்தோ அல்லது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியோ பறவைகள் இறந்திருக்கலாம் என உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments