தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள்.!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 60 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ ஹெராயின் போதைபொருளை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து இறங்கிய பெண் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், டிராலி பைகளில் ஹெராயின் மற்றும் மெத் என்ற போதைப் பொருள்களை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
Comments