சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்..! தீவிர வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள்..!

0 1547

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  நூதன முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்...

பூந்தமல்லி நகராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிச்சந்திரன் மணமகன் வரவேற்பு நிகழ்ச்சி போல் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணி தேனீர் கடையில் வாக்காளர்களுக்கு தேனீர் போட்டுக்கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 19வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகன்யா முரளிதரன் தெருக்களில் தூய்மை பணி செய்து வாக்கு சேகரித்தார்.

குமரி மாவட்டம் அருமனையில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 92 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கழுத்தில் மாஸ்க் மாலையுடன் இசைக் கச்சேரி நடத்தி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

சிவகாசி மாநகராட்சியில் 5வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திரா தேவி லஞ்சம் வாங்கமாட்டேன், சிறப்பான வார்டாக அமைத்துத் தருவேன் என பத்திரம் எழுதி வாக்கு சேகரித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் 40வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தின்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டு பெண்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

திருப்பத்தூர் நகராட்சி 33-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோபிநாத் துணி இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேர்தலில் 22 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.எஸ்.மாதேஷ்வரன் பொதுமக்களிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்து உறுதிமொழி பத்திரம் வழங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

கரூர் மாநகராட்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இரவு நேரத்தில் வீடு, வீடாக சென்று பெரியவர்களின் காலில் விழுந்து வாக்குகளை சேகரித்தார்.

ஆவடி மாநகராட்சி 13வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ரொட்டி சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தர்மபுரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி மீனை சமைத்து வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர்  98வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் வேட்பாளர் மேளதாளத்துடன் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் 2 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூற முதலமைச்சர் தயாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜெயக்குமார், சென்னை பட்டாளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற கருத்தில் தவறில்லை என அப்போது அவர் கூறினார். 

திருச்சி சமயபுரம் எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சி, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்றார்.

 மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பிரச்சாரம் மேற்கொண்டார். தங்களால் மட்டுமே வளர்ச்சி பணிகளை உடனடியாக செய்து தர முடியும் என்று அவர் தெரிவித்தார.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு சுப நிகழ்ச்சிகான மஞ்சள் பத்திரிக்கை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை 39வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, காதலர் தினத்தையொட்டி, அவரது கணவர் மோதிரம் அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து கூறினார்..

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காய்கறி, மீன் விற்பனை செய்தும், சமையல் எரிவாயு சிலிண்டருடன் சைக்கிளில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு சுப நிகழ்ச்சிகான மஞ்சள் பத்திரிக்கை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை 39வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, காதலர் தினத்தையொட்டி, அவரது கணவர் மோதிரம் அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து கூறினார்..

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காய்கறி, மீன் விற்பனை செய்தும், சமையல் எரிவாயு சிலிண்டருடன் சைக்கிளில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 46வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூக்கடையில் பூவிற்றும், சலவை செய்தும் வாக்கு சேகரித்தார். அதேப்போல், 45-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்,காய்கறி வியாபாரம் செய்தும், மீன் விற்பனை செய்தும் ஆதரவு திரட்டினார்.

 திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

17வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்

மதுரையில் 84 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிலாளர்களிடையே கனரக இயந்திரத்தை இயக்கி ஆதரவு திரட்டினார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது  வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் மனைவியுடன் வந்து வாக்கு சேகரித்தார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த  புதுமணத் தம்பதியருக்கு வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்தார். கொரோனா தொற்று வேகமாக பரவிய போது அதிமுக அரசு நோய் பரவலில் இருந்து மக்களை பாதுகாத்ததற்காக பிரதமரிடம் வாழ்த்து பெற்றதாக அவர் தெரிவித்தார்.

 நாகப்பட்டினம் கீழ்வேளூர் பேரூராட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நூற்றுக்கணக்கானத் தொண்டர்கள் புடைசூழ, ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயன் ரத்த தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 2வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்வம், மேள தாளங்கள் முழங்க, சிறுவர்கள் நடனத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் 6வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் வேட்பாளர் தனலட்சுமிக்கு ஆதரவாக சட்டமேதை அம்பேத்கர் மற்றும் கலைஞர் போல் வேடமிட்டவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேள தளங்கள் முழங்க கரகாட்ட குழுவினர் நடனமாடி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை, கொள்கை விளக்க பாடலுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி 51 வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரின் ஆதரவாளர்கள், சிலம்பாட்டம், தீப்பந்தாட்டம் போன்ற சாகசங்கள் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

கடலூர் மாநகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு பூஜை பொருட்களை விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments