சென்னையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியாணி வாங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டு ஓடிய அதிமுக ஆதரவாளர்கள்.!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரியாணி வாங்குவதற்காக ஒருவரை ஒருவர் தள்ளியபடி முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
வட சென்னை பகுதியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் 37 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடந்தபின் அதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அனைவரும் உணவு சாப்பிடுமாறு அறிவிப்பு வெளியிட்டதும் பலரும் முண்டியடித்து கொண்டு பிரியாணியை வாங்குவதற்கு அலைமோதினர்.
Comments