விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் ; இங்கிலாந்து வீரர் லியாம் ரூ.11.50 கோடிக்கு ஏலம்

0 4424
இங்கிலாந்து வீரர் லியாம் ரூ.11.50 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல் இரண்டாவது நாள் மெகா ஏலத்தில், அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை பதினொன்றரை கோடி ரூபாய்க்கும், மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஓடின் ஸ்மித்தை  6 கோடி ரூபாய்க்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஹானே-வை ஒரு கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியும், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே-வை 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

தமிழக வீரர் விஜய் ஷங்கரை 1 கோடியே 40 லட்சத்திற்கு குஜராத் அணி வாங்கியுள்ளது. இந்திய வீரர்கள் சேட்டன் சகாரியாவை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும், சையத் கலீல் அகமதுவை 5 கோடியே 25 லட்சத்திற்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments