10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக புகார்

0 20123

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், அதற்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில், திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது.

திங்கட்கிழமை 10ஆம் வகுப்பிற்கு அறிவியல், 12ஆம் வகுப்பிற்கு கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதன் வினாத்தாள்களும் கசிந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments