பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல்

0 2366

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பசிபிக் கடலில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், வடக்கு பசிபிக் கடலில் குறில் தீவுக்கு அருகே ரஷ்யாவின் போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்கா கடற்படையின் விர்ஜீனியா வகை நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை அந்த நீர்மூழ்கி கப்பல் ஏற்க மறுத்ததால், உடனடியாக தங்கள் நாட்டு வீரர்கள் அந்த நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்ததாகவும் கூறியுள்ளது.

ரஷ்யாவின் எல்லையில் அமெரிக்க கடற்படை நீர் மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரஷ்ய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments