சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் மீட்பு

0 1813

மத்தியப் பிரதேசத்தில் கால்வாய்ப் பணிக்காகச் சுரங்கம் தோண்டியபோது மண் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கத்னி மாவட்டத்தில் சிலீமனாபாத் என்னுமிடத்தில் கால்வாய்த் திட்டத்துக்காகச் சுரங்கம் தோண்டும்போது மண் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மண்ணை அகற்றி 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments