தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்

0 7131

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் நிலையில், அவர்களது திருமணத்திற்கு தமிழில் பத்திரிக்கை அடித்திருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவரான வினி ராமன் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கொரோனா காரணமாக, தள்ளிப்போன இவர்களது திருமணம் வருகிற மார்ச் 27-ந் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்பதால், இவர்களது திருமணத்திற்கு தமிழில் அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments