பஞ்சாப் மக்களுக்காக பாஜக தொடர்ந்து உழைக்கும் - ஜே.பி. நட்டா
சீக்கியர்களுக்காக பிரதமர் மோடி செய்த பணிகளைப் போல வேறு யாரும் செய்யவில்லை என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநிலம் ரோபர் என்ற இடத்தில் பேசிய அவர், துணிச்சலான பஞ்சாப் பகுதிக்கு வருவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கூட, பிரதமர் மோடி குருத்வாராக்களின் லாங்கர் மீதான வரியை நீக்கியுள்ளததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நட்டா, பஞ்சாப் மக்களுக்காக பாஜக தொடர்ந்து உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.
Comments