பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது அதிநவீன ரேடார் செயற்கைக் கோள்

0 1742

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆயிரத்து 710 கிலோ எடையுடையது. 5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கை கோள் புவியில் இருந்து 529 கிலோ மீட்டர் உயரே சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன. இந்த ரேடார் செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்பு,  விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவி புரியும். அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments