காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான, இதயங்களை கரையச் செய்யும் சாக்லெட்டுகள் தயாரிக்கும் கலைஞர்

0 2476

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பெல்ஜியத்தில் விருதுகள் பல பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ்கோபன்ஸ் இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம், ராஸ்பெரி, உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லெட்டுகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஈஸ்டர் நெருங்கும் நிலையில் காதலும் காற்றில் தவழ்கிறது. இதில் தனது தனித்திறமையைக் காட்டும் ஸ்கோபென்ஸ், மிகச்சிறந்த சாக்லெட் தயாரிப்பவர் என்று பிரான்ஸ் விடுதியில் 4 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் பல விருதுகளைக் குவித்துள்ளார்.

இப்போது இவருடைய சொந்த சாக்லேட் கடை பிரஸல்ஸ் அருகே அமைந்துள்ளது. உறவுகளை இனிக்கச் செய்யும் இவருடைய சாக்லெட்டுகளுக்காக மக்கள் அவர் கடையைத்தேடி தொலைதூரத்தில் இருந்து  வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments