ஆளின்றி தானே இயங்கும் ஹெலிகாப்டர் பரிசோதனையை மேற்கொண்ட அமெரிக்கா.!
முதல் முறையாக பைலட் இல்லாமல் இயங்கும் ஹெலிகாப்டரை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொண்டது.
அந்நாட்டின் கென்டக்கி மாநிலத்தில், இந்த ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,000 அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்த அந்த ஹெலிகாப்டர், கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது.
அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக கடினமாக போர்க்கள சூழலில் உயிரிழப்புகளை தவிக்கும் வகையிலும், எதிரிகளை எளிதாக முறியடிக்கவும் இந்த தானியங்கி விமான தொழில் நுட்பத்தை கொண்டுவருவதாக இத்திட்டத்தின் இயக்குநர் ஸ்டூவர்ட் யங் குறிப்பிட்டுள்ளார்.
Comments