இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது - அந்நாட்டு அரசு

0 3218

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா படைகளை குவித்து வருவதால், அங்கு வசிக்கும் இங்கிலாந்து நாட்டவர்கள் விமான சேவைகள் உள்ள போதே வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில், விமானம் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் உக்ரைனில் மேற்கொள்ள முடியாது என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.

அதே போல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு மக்களும் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments