முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்?
பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார்.
இது குறித்து தகவல் அளிக்க மத்திய, மாநில அரசுகளின் தொற்று தடுப்பு குழுவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த சுகாதார நிபுணர்கள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை உலகளாவிய நிலைப்பாடாக கருத முடியாது என குறிப்பிட்டுள்ளர்.
முகக்கவசம் என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments