போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சா தீவைத்து எரித்து அழிப்பு.!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 200 டன் கஞ்சா போதைப் பொருட்களைக் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர்.
ஆந்திரம், ஒடிசா மாநில மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை அனகாபள்ளி அருகே கோடூரில் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர்.
அழிக்கப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 850 கோடி ரூபாய் எனக் கூறப்படுகின்றது. கடந்த ஓராண்டில் 7,552 ஏக்கரில் பயிரிட்டிருந்த கஞ்சா தோட்டங்களை அழித்ததாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments