ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம்.. கோடியில் புரளும் வீரர்கள்

0 5221

ஐபிஎல் கிரிக்கெட்டின் 15 ஆவது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

இருநாட்கள் நடைபெறும் ஏலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகள் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும், நட்சத்திர வீரர்களை கோடிக்கணக்கான ரூபாய்களில், போட்டி போட்டு ஏலம் எடுத்தன.

ஸ்ரேயாஸ் ஐயரை 12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியும், ஹர்ஷல் படேலை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு அணியும் வாங்கியுள்ளது.

அதேபோல், கடந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய உத்தப்பா, பிராவோவை அந்த அணியே மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்நிலையில், மேடையில் தொகுப்பாளர் ஹக் எம்மாண்ட்ஸ் மயங்கி விழுந்ததால் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments