விபத்துக்குள்ளான ஜூபிடர் வாகன சர்வீஸ் பிரச்னை முடிவு.. இன்சூரன்ஸ் பணம் தந்தால் போதும் என்று சமரசம்

0 3278
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனத்திற்கு சர்வீஸ் கட்டணமாக 58,510 ரூபாய் கேட்ட தனியார் ஏஜன்சி நிறுவனம், தற்போது இன்சூரன்ஸ் தொகை மட்டும் பெற ஒப்புக் கொண்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனத்திற்கு சர்வீஸ் கட்டணமாக 58,510 ரூபாய் கேட்ட தனியார் ஏஜன்சி நிறுவனம், தற்போது இன்சூரன்ஸ் தொகை மட்டும் பெற ஒப்புக் கொண்டது.

புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா என்பவர் டிவிஎஸ் இதயம் எஜென்ஸியில் 86 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஜூபிடர் இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார்.

விபத்தில் அந்த வாகனம் சேதமடைந்ததால், அதனை சர்வீஸ் செய்வதற்கு 8 மாதங்களாக இழுத்தடித்த நிறுவனம் இறுதியில் 58,510 ரூபாய்க்கு பில் ஒன்றை சேக் அப்துல்லாவின் மனைவி ஆயிஷா பானுவிடம் கொடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிஷா பானு, அந்த ஷோரூம் முன்பு கையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியான நிலையில் இன்சூரன்ஸ் பணம் 20ஆயிரம் ரூபாய் தந்தால் போதும் என்று சமரசத்துடன் வாகனத்தை இதயம் ஏஜன்சி நிறுவனம் கொடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments