திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து அனுமதி மறுப்பு.. வனத்துறையினருடன் வாகன ஓட்டுனர்கள் வாக்குவாதம்

0 2146
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக இரவு நேர வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வனத்துறையினரிடம் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக இரவு நேர வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வனத்துறையினரிடம்  ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மோதி சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதால் வனத்துறையினரின் பரிந்துரையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்ட போதும் மக்கள் எதிர்ப்பால் அமல்படுத்தப்படவில்லை.

இது சம்பந்தமான வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத்  தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரண்டாவது நாளாக கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. வனத்துறையினர் பண்ணாரி சோதனைச்சாவடியில் பேரி கார்டுகளை வைத்து வாகனங்கள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments