காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் - அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார், உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் படையெடுப்பு நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
போரைத் தவிர்க்க பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன.
உக்ரைனில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், பிரச்னை விரைவில் மோசமடையக் கூடும் என்றும் பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கர்களைக் காப்பாற்ற அமெரிக்காவும் படைகளை அனுப்பினால் அது உலகப் போராக மாறக்கூடிய சூழலை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் எச்சரித்துள்ளார்
Comments