பெண்கள் விடுதலைபெற வேண்டும்,சிறைப்படுத்திக் கொள்ளக் கூடாது - ஹிஜாப் குறித்து கங்கனா ரணாவத் கருத்து

0 2293
பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூண்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூண்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடைவிதிக்கப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.

இப்பிரச்சினை குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத், ஈரானில் 50 ஆண்டுகளில் பெண்களுக்கு புர்கா முதல் பிகினி வரை உடை விஷயத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த மற்றொரு பதிவரின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

பெண்கள் தங்கள் துணிவைக் காட்ட வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானில் புர்கா அணிய மாட்டேன் என்று போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments