பொதுவெளியில் மக்கள் முககவசம் அணிய அவசியமில்லை - இத்தாலி அரசு
இத்தாலியில் பொதுவெளியில் மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசத்தை துறந்து மற்றவர்களை புன்னகையால் வசீகரிக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்வுகளில் மட்டும் மக்கள் முக கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. தொற்று நாளுக்கு நாள் குறைந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் அதிகரித்த வண்ணமே இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments