ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொன்று அழிப்பு
ஸ்பெயினில் பறவைக் காய்ச்சல் பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டன.
பறவைகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிகள் கொல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, செர்பியா நாடுகளில் இருந்து வந்த பறவைகள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments