கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை - உயர்நீதிமன்றம்
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறை சார்பில் கோவிலின் பாதுக்காக்கப்பட்ட பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 39 மீட்டர் தூரத்தில் கட்டுமானங்கள் கட்டப்படுவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, சொந்த விதிகளையே தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டு கட்டுமானங்கள் மேற்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், விதிமீறி கட்டிடங்கள் கட்டியிருந்தால் அது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
Comments