கார்களில் மும்முனை சீட்பெல்ட் வைப்பது கட்டாயம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
காரில் முன்னோக்கியிருக்கும் இருக்கைகள் அனைத்திலும் மும்முனை சீட் பெல்ட் வைப்பதைக் கட்டாயமாக்கும் கோப்பில் கையொப்பமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
முன் இருக்கைகளிலும் பின் வரிசையில் இரு பக்கவாட்டு இருக்கைகளிலும் மும்முனை சீட் பெல்ட்கள் வைத்தே இப்போது பெரும்பாலான கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பின்வரிசையில் நடு இருக்கையில் உள்ளோரின் பாதுகாப்பையும் கருதி, முன்னோக்கியுள்ள அனைத்து இருக்கைகளிலும் மும்முனை சீட் பெல்ட் வைப்பதைக் கட்டாயம் ஆக்கியுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Comments